No products in the cart.

தினம் ஓர் ஊர் – ஆளுர் (Aloor) – 18/09/23
தினம் ஓர் ஊர் – ஆளுர் (Aloor)
மாநிலம் – தமிழ்நாடு
மாவட்டம் – கன்னியாகுமரி
மக்கள் தொகை – 15063
கல்வியறிவு – 92.71%
மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி
சட்டமன்றத் தொகுதி – குளச்சல்
மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)
துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)
காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)
District Revenue Officer – Bro. J.Balasubramaniam
District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)
Joint Director / Project Director – Bro. P.Babu
மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)
சட்டமன்ற உறுப்பினர் – Bro. J.G.Prince (MLA)
மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan
மேயர் (Mayor) – Bro. Mahesh
துணை மேயர் (Deputy Mayor) – Sis. Mary Princy
City Health Officer – Bro. John Jonabark
City Engineer – Bro. T.Balasubramaniyam
Chief Judical Magistrate (Nagercoil) _ Sis. V.Vijayalakshmi
Principal District Court – Bro. S.Arulmurugan
Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)
ஜெபிப்போம்
ஆளுர் (Aloor) தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் வட்டத்தில் இருந்த ஒரு பேரூராட்சி அக்டோபர், 2021 முதல் நாகர்கோயில் மாநகராட்சியுடன் தெங்கம்புதூர் மற்றும் ஆளுர் பேரூராட்சிகள் முழுமையாக இணைக்கப்பட்டது. ஆளுர் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.
மாவட்ட கலெக்டர் Bro. P.N.Sridhar அவர்களுக்காகவும், துணை மாவட்ட கலெக்டர் Bro. H.R.Koushik அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. D.N.Hari Kiran Prased அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் அலுவலர் Bro. J.Balasubramaniam அவர்களுக்காகவும், வருவாய் அலுவலர் (Nagercoil) Bro. K.Sethuramalingam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தர் இவர்களை ஆசீர்வதித்து வழிநடத்திட ஜெபிப்போம்.
நாகர்கோவில் மாநகராட்சி ஆணையாளர் Bro. Anand Mohan அவர்களுக்காகவும், மேயர் Bro. Mahesh அவர்களுக்காகவும், துணை மேயர் Sis. Mary Princy அவர்களுக்காகவும், City Health Officer Bro. John Jonabark அவர்களுக்காகவும், City Engineer Bro. T.Balasubramaniyam அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்கள் செய்கின்ற பணிகளுக்காக ஜெபிப்போம். இவர்களுடைய குடும்பங்களுக்காக ஜெபிப்போம்.
ஆளுர் பேரூராட்சி குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கும் கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும். குளச்சல் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. J.G.Prince அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். கர்த்தருடைய ஆளுகையின் கரத்திற்குள்ளாக இவர்களை ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.
ஆளூர் பேரூராட்சி, கன்னியாகுமரியிலிருந்து 8 கிமீ தொலைவிலும்; நாகர்கோவிலிருந்து 8 கிமீ தொலைவிலும் உள்ளது. இப்பேரூராட்சி 8.1 கிமீ பரப்பளவும், 15 வார்டுகளும், 29 தெருக்களும் உள்ளன. ஆளூர் டவுன் பஞ்சாயத்தில் மொத்தம் 3,882 வீடுகளுக்கு குடிநீர், சாக்கடை போன்ற அடிப்படை வசதிகள் உள்ளன. இந்த பேரூராட்சியில் உள்ள கவுன்சிலர்களுக்காக அவர்களுடைய பொறுப்புகளுக்காக ஜெபிப்போம்.
ஆலூர் டவுன் பஞ்சாயத்தில் 15,063 மக்கள்தொகை உள்ளது, இதில் 7,460 ஆண்கள் மற்றும் 7,603 பெண்கள் இருக்கிறார்கள். ஆலூரில் ஆண்களின் கல்வியறிவு 94.94% ஆகவும், பெண்களின் கல்வியறிவு விகிதம் 90.52% ஆகவும் உள்ளது. மக்கள்தொகையில் இந்துக்கள் 55.86% பேரும், முஸ்லிம்கள் 8.82% பேரும், கிறிஸ்தவர்கள் 34.95% பேரும், சீக்கியர் 0.01% பேரும், புத்த 0.02% பேரும், மதங்களை பின்பற்றாதவர்கள் 0.35% பேரும் இந்த பேரூராட்சியில் வசிக்கின்றார்கள். இந்த பேரூராட்சியில் உள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்களின் வாழ்வாதாரத்திற்காகவும், பொருளாதார தேவைகளுக்காகவும் ஜெபிப்போம்.
ஆளுர் பேருராட்சி அதிகமாக வேளாண்மையைச் சாந்துள்ளது. மொத்த மக்கள் தொகையில், 5,965 பேர் வேலை அல்லது வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். இதில் 4,248 ஆண்கள் மற்றும் 1,717 பெண்கள் ஆவார்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ள மக்களுக்காக ஜெபிப்போம். அவர்கள் கையிட்டு செய்கின்ற வேலைகளை எல்லாம் கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். கர்த்தருடைய பாதுகாப்பும், வழிநடத்தலும் இவர்களோடுகூட இருக்க ஜெபிப்போம்.