Daily Updates

தினம் ஓர் ஊர் – அஞ்சுகிராமம் (Anjugramam) – 30/08/23

தினம் ஓர் ஊர் – அஞ்சுகிராமம் (Anjugramam)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – கன்னியாகுமரி

மக்கள் தொகை – 10982

கல்வியறிவு – 93.82%

மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி

சட்டமன்றத் தொகுதி – கன்னியாகுமரி

மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)

துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)

District Revenue Officer – Bro. J.Balasubramaniam

District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)

Joint Director / Project Director – Bro. P.Babu

மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. Thalavai Sundaram (MLA)

மாநகராட்சி ஆணையாளர் – Bro. Anand Mohan

Principal District Court – Bro. P.Ramachandran (Kanyakumari)

ஜெபிப்போம்

அஞ்சுகிராமம் (Anjugramam), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். சுற்றுலா தலங்களான கன்னியாகுமரி, வட்டக் கோட்டை மற்றும் கூடங்குளம் அணுமின் நிலையம் ஆகியவை இதன் அருகாமையில் உள்ளது. அஞ்சுகிராமம் பேரூராட்சிக்காக ஜெபிப்போம்.

அஞ்சுகிராமம் என்பது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பஞ்சாயத்து நகரமாகும். 1956 க்கு முன்பு, அஞ்சுகிராமம் திருவிதாங்கூர்-கொச்சி மாநிலம் மற்றும் சென்னை மாநிலத்தின் எல்லையில் இருந்தது. அப்போது அஞ்சுகிராமம் கேரளாவுடன் இணைந்தது. இப்போது கன்னியாகுமரி மாவட்டத்தில், மாவட்ட எல்லையில் உள்ளது. இந்த பேரூராட்சி கன்னியாகுமரியிலிருந்து 8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. காஷ்மீர் மற்றும் கன்னியாகுமரியை இணைக்கும் NH 7 குறுக்குவழியை இது கொண்டிருப்பது சிறப்பு ஆகும்.

மாவட்ட கலெக்டர் Bro. P.N.Sridhar அவர்களுக்காகவும், துணை மாவட்ட கலெக்டர் Bro. H.R.Koushik அவர்களுக்காகவும், காவல்துறை கண்காணிப்பாளர் Bro. D.N.Hari Kiran Prased அவர்களுக்காகவும், மாவட்ட வருவாய் அலுவலர் Bro. J.Balasubramaniam அவர்களுக்காகவும், District Forest Officer Bro. M.Ilayaraja (I.F.S) அவர்களுக்காகவும், Joint Director / Project Director Bro. P.Babu அவர்களுக்காகவும், மாநகராட்சி ஆணையாளர் Bro. Anand Mohan அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

அஞ்சுகிராமம் பேரூராட்சி கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. Thalavai Sundaram அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சி 7.60 ச.கி.மீ. பரப்பும், 15 வார்டுகளும், 32 தெருக்களும், 3760 வீடுகளும் உள்ளன. இங்குள்ள ஒவ்வொரு வார்டு உறுப்பினர்களுக்காக ஜெபிப்போம். அவர்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்புகளுக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள தெருக்களுக்காகவும், வீடுகளுக்காகவும் ஜெபிப்போம்.

அஞ்சுகிராமம் டவுன் பஞ்சாயத்தில் 10,982 மக்கள் வாழ்கின்றார்கள். இவர்களில் 5,401 ஆண்கள் மற்றும் 5,581 பெண்கள் உள்ளனர். மேலும் 0-6 வயதுடைய குழந்தைகளின் எண்ணிக்கை 1172 ஆக உள்ளது. இங்கு வாழும் மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் உள்ள குடும்பங்களுக்காக ஜெபிப்போம். குடும்பங்களில் பரிசுத்த ஆவியானவரின் ஆளுகை இருக்க ஜெபிப்போம். இரட்சிக்கப்படாத குடும்பங்கள் இரட்சிக்கப்பட ஜெபிப்போம்.

இந்த பேரூராட்சியில் உள்ள பெரும்பாலான மக்கள் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் செய்கின்ற வேலைகளை கர்த்தர் ஆசீர்வதிக்கும்படி ஜெபிப்போம். கையின் பிரயாசங்களை கர்த்தர் ஆசீர்வதித்து குடும்பங்களை பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம். தொழிலுக்கான பொருளாதார தேவைகள் சந்திக்கப்பட ஜெபிப்போம்.

அஞ்சுகிராமம் பேரூராட்சிக்காக அதன் வளர்ச்சிக்காக ஜெபிப்போம். இந்த பேரூராட்சியில் சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் ஆண்டவருடைய வார்த்தை விதைக்கப்படவும், அதன்மூலம் அநேக மக்கள் இரட்சிக்கப்பட்டு கர்த்தருடைய நாமம் மகிமைப்பட ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.