கல்வாரியின் உருக்கமான தியானம்!

50.00

முன்னுரை!

வருடத்திற்கு ஒரு முறை, நாற்பது நாட்கள் கல்வாரிச் சிலுவையை தியானிக்ககூடிய, காலம் வருகிறது. சில ஆலயங்களிலே, இந்த நாற்பது நாட்களும், லெந்து நாட்களாக, சுயவெறுப்பு, சரீர ஒடுக்குதல் நாட்களாக ஆசரிக்கிறார்கள்.

அந்த நாட்களில், கிறிஸ்தவர்கள் நல்ல காரியங்கள் ஒன்றும் செய்வதில்லை. அதாவது புதுமனை புகுவிழா, திருமண விழா என்று, மங்கள காரியங்கள் ஒன்றையும் அவர்கள் நடப்பிப்பதில்லை. பெண்கள் பூச்சூடுவதில்லை. வீட்டார் மாம்சம் புசிப்பதில்லை. இனிப்பு வகைகள் பரிமாறுவதில்லை . ப

அதே நேரம், ஒரு சிலர், இந்த நாட்களை உபவாசத்துக்கும், ஜெபத்துக்கும், ஒதுக்கி வைக்கிறார்கள். கல்வாரிச் சிலுவையை ஆர்வமாய் தியானிக்கிறார்கள். ஆவிக்குரிய நன்மைகளைப் பெற்றுக் கொள்ளு கிறார்கள்.

சில பெந்தேகோஸ்தே சபைகளில், லெந்து நாட்கள் என்றும், பெரிய வெள்ளி என்றும், ஈஸ்டர் என்றும் ஒன்றும் கொண்டாடுவதில்லை. இதெல்லாம் “புறஜாதி மார்க்கத்தாரின், “மூடப் பழக்க வழக்கங்கள்” என்று சொல்லி, தள்ளிவிடுகிறார்கள்.

ஏலிம் சபை, ஏறக்குறைய பத்து ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்ததிலிருந்து, ஒவ்வொரு வருடமும், கல்வாரியின் அன்பையும், கர்த்தருடைய விலையேறப்பெற்ற இரத்தம், பாடு மரணங்களினால் வரும் ஆசீர்வாதங்களை நாங்கள் பிரசங்கிக்க ஆரம்பித்தோம்.

அவை, தனிப்பட்ட முறையில் என்னுடைய ஆத்துமாவுக்கு, பிரயோஜனமாயிருந்தது. “நாட்களை விசேஷித்துக் கொள்ளுகிறவன் கர்த்தருக்கென்று விசேஷித்துக் கொள்ளுகிறான்’ என்று வேதம் சொல்லுகிறது (ரோம. 14:6). இந்தப் புத்தகத்தில், கல்வாரியை தியானித்த சில தியானங்களை, சிறு கதைகளோடு இணைத்து, நீங்கள் பயனடையும்படி, கொடுத்திருக்கிறேன். ஆகவே, ஜெபத்தோடு வாசியுங்கள்.

இதனுடைய செய்திகள், பிரசங்கிமார்களுக்கும், ஊழியர்களுக்கும் கூட, மிகவும் பிரயோஜனமாயிருக்கும். நீங்கள் கர்த்தரிடம் நெருங்கி கிட்டிச் சேர வேண்டும் என்பதும், நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதும் எங்களுடைய நோக்கமாகும்.

கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.

சகோ. J. சாம் ஜெபத்துரை

Additional information

Author

J. Sam Jebadurai

Publisher

Horeb Art Printers