No products in the cart.
Out Of Stock
பூரணம், பரிபூரணம், சம்பூரணம்!
₹50.00
முன்னுரை!
– ”பூரணம், பரிபூரணம், சம்பூரணம்” என்ற இந்த அருமையான புத்தகத்தை, பூரணமான மகிழ்ச்சியோடு, உங்களுக்குக் கொடுப்பதில் மன நிறைவடைகிறேன். நீங்கள் கிறிஸ்துவிலே வளரவும், ஆவிக்குரிய சத்தியங்களை புரிந்துகொள்ளவும், மிக எளிமையான நடையிலே, எவரும் அறிந்துகொள்ளுகிறபடி, இந்த புத்தகத்தை எழுத, கிருபை செய்த தேவனை ஸ்தோத்தரிக்கிறேன்.
ஆண்டவர், ஆதாம் ஏவாளை சிருஷ்டித்தபோது, குழந்தைப் பருவத்திலிருந்து வளர்ந்துவரச் செய்யாமல், பூரண புருஷனாக, பூரண அறிவுள்ளவராக உருவாக்கினார். வேத பண்டிதர்களின் கூற்றுப்படி, ஏறக்குறைய முப்பது வயதுடைய வாலிபனுக்கு, இருக்கிற அறிவு, ஞானம், புத்தி, விவேகம் ஆதாமுக்குள் இருந்தது.
ஆனால் இயேசுகிறிஸ்துவை, பிதாவானவர் முதலாம் ஆதாமைப் போல, சிருஷ்டிக்கவில்லை. மரியாளின் வயிற்றிலிருந்து, சிறு குழந்தையாக, வளர்ந்து வந்தார். எல்லாவிதத்திலும் நம்மைப்போலவே, சோதிக்கப்பட்டார். ஆனால் ஒவ்வொரு வளர்ச்சியிலும், அவரிலே பூரணம் இருந்தது. முப்பத்து மூன்றரை வயதிலே, பூரண புருஷனாக, நமக்காக சிலுவையிலே, தன் ஜீவனைக் கொடுத்தார்.
ஒவ்வொரு வயதிலும், நமக்கு என்னென்ன பிரச்சனை வரும், என்னென்ன போராட்டங்கள் இருக்கும் என்பதையெல்லாம் அவர் அறிந்திருக்கிறதினாலே நம்மை பூரணத்துக்கு நேராய் வழி நடத்த, வல்லவராயிருக்கிறார்.
– அஸ்திபாரங்களின் உபதேசங்களுமுண்டு. பூரணத்துக்கான உபதேசங்களுமுண்டு. இந்த புத்தகம் கிறிஸ்துவில் நீங்கள் பூரணமாக வளரவும், மகிமையின்மேல் மகிமையடைந்து, மறுரூபமாகவும் உங்களுக்கு உதவியாயிருக்கும்.
சகோ. J. சாம் ஜெபத்துரை
Out of stock
Additional information
Author | J. Sam Jebadurai |
---|---|
Publisher | Horeb Art Printers |
Reviews
There are no reviews yet.