No products in the cart.
ஞான மொழிகளும், நீதிமொழிகளும்!
₹50.00
முன்னுரை!
“ஞான மொழிகளும், நீதிமொழிகளும்” என்ற இந்த அருமையான புத்தகத்தை, உங்களுடைய கைகளிலே கொடுப்பதைக் குறித்து, மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
உலகத்தில் வாழ்ந்தவர்களுக்குள்ளே, மிகப் பெரிய ஞானியாக சாலொமோன் விளங்கினார். அதற்கு காரணம் என்ன? வாலிப வயதிலே ராஜாவான சாலொமோன், கர்த்தரைப் பிரியப்படுத்தும்படி, மகா பெரிய ஆலயத்தை கட்டினார். பிரதிஷ்டை விழாவிலே, ஏராளமான பலியை கர்த்தருக்கு செலுத்தினது மட்டுமல்ல, கர்த்தரை வரவேற்று, அருமையான ஒரு ஜெபமும் செய்தார்.
அன்று இரவிலே, கர்த்தர் சொப்பனத்தின் மூலம் சாலொமோனிடம், நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். சாலொமோன், “தேவனே, உம்முடைய ஜனங்களை அரசாள, எனக்கு ஞானமுள்ள இருதயம் வேண்டும்” என்று கேட்டார். கர்த்தர் மனமகிழ்ந்து, “நீ கேளாத ஐசுவரியத்தையும், கனத்தையும், மகிமையையும் உனக்குத் தந்தேன்” என்று வாக்குப் பண்ணினார்.
அந்த ஞானத்தினால் சாலொமோன், நாற்பது ஆண்டுகள் இஸ்ரவேல் ஜனங்களை, புத்தியாய் அரசாண்டார். மாத்திரமல்ல, நீதிமொழிகள், பிரசங்கி, உன்னதப்பாட்டு என்ற மூன்று புத்தகங்களையும் எழுதி, வருங்கால சந்ததிக்கு வைத்துப் போனார்.
சாலொமோனுக்கு ஞானத்தை அருளிச் செய்த ஆண்டவர், தம்முடைய அனந்த ஞானத்தினாலே, உலகத்தை உண்டாக்கினது மட்டுமல்ல, நீங்களும் ஞானமுள்ளவர்களாக விளங்க வேண்டும் என்பதற்காக, முழு வேதாகமத்தையும் அருளிச் செய்திருக்கிறார்.
வேதாகமத்திலே, சாலொமோனின் ஞானம் மட்டுமல்ல, அநேக பரிசுத்தவான்கள், ஊழியக்காரர்களுடைய ஞானமும் எழுதப்பட்டிருக் கின்றன. இவைகளையெல்லாம், கர்த்தர் நம்முடைய பிரயோஜனத் திற்காகவே தந்திருக்கிறார். இந்த ஞானத்தை பயன்படுத்தி, கர்த்தருடைய வழிகளிலே நடவுங்கள். கர்த்தரை நேசித்து அவரை பின்பற்றுங்கள்.
அப்பொழுது, உங்களுடைய ஓட்டம் ஜெயத்துடன் முடியும். நித்திய ஜீவனைப் பெற்று, பரலோக ராஜ்யத்தில் பிரவேசிப்பீர்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
J.சாம் ஜெபத்துரை.
Additional information
Author | J. Sam Jebadurai |
---|---|
Publisher | Horeb Art Printers |
Reviews
There are no reviews yet.