No products in the cart.
சோதனையா சாதனையா?
₹50.00
முன்னுரை!
இந்த உலக வாழ்விலே, சோதனையை சந்திக்காதவர்கள் ஒருவருமேயில்லை. வயதுக்கேற்ப சோதனைகளுண்டு. அறிவுக் கேற்ப சோதனைகளுண்டு. அந்தஸ்துக்கேற்ப சோதனைகளுண்டு.
கடல் இருக்கிற வரையிலும், அலைகள் இருக்கத்தான் செய்யும். அதுபோல, சோதனைக்காரனாகிய சாத்தான் இருக்கிற வரையிலும், சோதனைகள் வரத்தான் செய்யும். அந்த வேளைகளிலே, அநேகர் சலித்துக்கொள்வதுண்டு. “சோதனைமேல் சோதனை போதுமடா சாமி.” “பட்ட காலே படும். கெட்ட குடியே கெடும்” என்று தத்துவம் பேசுவாருமுண்டு. சோதனையை ஜெயித்து விட்டால்,. அது பெரிய சாதனை. சோதனையில் தோற்றுவிட்டால், அது மிகப் பெரிய வேதனை.
வாலிபர்களுக்கு வழிகாட்டியாய் விளங்க வேண்டுமென்பதற் காக, வேதத்திலுள்ள பரிசுத்தவான்களுடைய வாழ்க்கை வரலாறு, அவர்களுக்கு வந்த சோதனைகள், அதிலிருந்து எப்படி வெற்றி பெற்றார்கள். மட்டுமல்ல, இயேசு கிறிஸ்து, தனக்கு வந்த மூன்று சோதனைகளையும் எவ்விதமாய் மேற்கொண்டார் என்பதைக் குறித்தும், இந்தப் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன். பல தேவ ஊழியர்களுடைய அனுபவங்கள், உங்களுக்கு மிகவும் பிரயோஜன மாயிருக்கும்.
ஜெபத்தோடு வாசியுங்கள். உங்களுக்கு வரும் சோதனைகள் எல்லாவற்றிலும் வெற்றி சிறந்து, கர்த்தரை மகிமைப்படுத்துங்கள். புத்தக ஊழியங்களை ஊக்குவியுங்கள். முடிந்தால் உங்களால் இயன்ற ஒரு உதவியை, புத்தக ஊழியத்திற்கு அனுப்பி வையுங்கள்.
கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
சகோ. J. சாம் ஜெபத்துரை
Additional information
| Author | J. Sam Jebadurai |
|---|---|
| Publisher | Horeb Art Printers |






Reviews
There are no reviews yet.