No products in the cart.
சீஷர்கள் – யோவான், பேதுரு,யாக்கோபு,அந்திரேயா!
₹50.00
முன்னுரை!
கர்த்தருடைய பெரிய கிருபையினால், இயேசு கிறிஸ்துவினுடைய பன்னிரண்டு சீஷர்களைக் குறித்து, வேதபாடம் எழுத வேண்டுமென்று நீண்டகாலமாக, என்னுடைய இருதயத்தில் வாஞ்சையிருந்தது. – ஒரு பக்கம், அவர்கள் சீஷர்களாகயிருந்ததினாலே, அவர்கள் இயேசுவின் அருகிலே இருந்து மிகுந்த பக்தியுள்ளவர்களாக கற்றுக் கொண்டார்கள். கிறிஸ்துவின் போதனைகளை, நேருக்கு நேர் கேட்டார்கள். அவர் செய்த அற்புதங்களையெல்லாம், கண்குளிர கண்டார்கள். இயேசு கடல் மேல் நடப்பதை கண்டார்கள். ஐந்து – அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு, ஐயாயிரம் பேருக்கு போஷித்தபோது, அதிலே பங்கேற்றார்கள்.
இயேசு கிறிஸ்துவினுடைய, மலைப் பிரசங்கத்தைக் கேட்டு, அவருடைய ஞானத்தை வியந்து போற்றியிருந்திருக்கக்கூடும். அப்படிப் பட்ட குரு, வேறு யாருக்கும் கிடைத்திருக்காது. கிறிஸ்து எதை போதித்தாரோ, அதையே தன் வாழ்க்கையில் செயல்படுத்தினார். சீஷர் களுக்கு மட்டுமல்ல, நம் ஒவ்வொருவருக்கும், அவர் முன்மாதிரியானார்.
இயேசுவின் சீஷர்களானபடியால், பரிசேயர், சதுசேயர், வேதபாரகர், பிரதான ஆசாரியர்கள் எல்லோரும், அவர்களை பகைத்தார்கள். என்றாலும், அவர்கள், தங்களது விசுவாசத்திற்காக உறுதியாய் நின்றார்கள். கர்த்தர்மேல் வைத்த அன்பினாலே, பல பாடுகள் பட்டார்கள். பல்வேறு தேசங்களிலே, இரத்த சாட்சியாய் மரித்தார்கள்.
இயேசுவினுடைய சீஷர்களைப் பற்றி, இரண்டு புத்தகங்களாக வெளிவிட, கர்த்தர் கிருபை செய்தார். நீங்களும் கிறிஸ்துவினுடைய சீஷராக, அப்போஸ்தலர்களாக, இயேசுவை… பின்பற்ற வேண்டும் என்பதே, என்னுடைய உள்ளத்தின் ஜெபமாகும்.
இந்த புத்தகம், அதற்கு உதவியாயிருக்கும். ஜெபத்தோடு வாசியுங்கள். கர்த்தருக்காக எழும்பிப் பிரகாசியுங்கள்.
சகோ. J. சாம் ஜெபத்துரை
Additional information
Author | J. Sam Jebadurai |
---|---|
Publisher | Horeb Art Printers |
Reviews
There are no reviews yet.