No products in the cart.
ஆவியோடும் கருத்தோடும் ஜெபிப்பது எப்படி?
₹50.00
முன்னுரை!
ஜெபத்தைப் பற்றிய ஆயிரக்கணட்டான புத்தகங்கள் வெளி வந்தபோதிலும், கூடவே வித்தியாசமான முறையிலே, இந்தப் புத்தகத்தையும் எழுதும்படி கர்த்தர் ஏவுதலைத் தந்தார். நான் சிறுவனாய் வளர்ந்த சபையிலே, அந்நிய பாஷை ஜெபத்துக்கு, அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ஆராதனை நேரத்தில் அந்நிய பாஷையிலே பேசுவார்கள். கர்த்தரை துதிப்பார்கள். பரலோகம் இறங்கி வந்ததுபோல இருக்கும்.
அப். பவுல், “நான் ஆவியோடும் விண்ணப்பம்பண்ணுவேன், கருத்தோடும் விண்ணப்பம்பண்ணுவேன்” என்றார். அதுவே பதிலைப் பெற்றுக்கொள்ளக்கூடிய, ஊக்கமான ஜெபமாகும். ஜெபத்தின் விளைவாக, அப். பவுல் மூன்றாம் வானமாகிய பரதீசி வரைக்கும் எடுத்துக்கொள்ளப்பட்டார் (2 கொரி. 12:1-4).
ஆவியோடும், கருத்தோடும் ஜெபித்த, அப்.பவுலின், கரத்தைக் கொண்டு, கர்த்தர் விசேஷமான அற்புதங்களை செய்தார். அவர்மேல் உள்ள அபிஷேகத்தினாலே, அவருடைய கச்சைகள், உறுமால்கள் பட்ட, அநேகர் வியாதியஸ்தர்கள் சுகமானார்கள் (அப். 19:11,12). அதுபோல பரிசுத்த ஆவியினால் நிரம்பியிருந்த, அப். பேதுருவின் நிழல்பட்டு, அநேகர் விடுதலையும், சுகமும் பெற்றார்கள் (அப். 5:15).
நீங்கள் ஜெபத்தோடு இந்தப் புத்தகத்தை வாசியுங்கள். ஆவியோடும், விண்ணப்பம்பண்ணுங்கள். நிச்சயமாகவே, நீங்கள் தேசத்தின் அஸ்திபாரங்களை அசைப்பீர்கள்..
கர்த்தர், உங்களை வல்லமையாக பயன்படுத்துவாராக!
சகோ. J. சாம் ஜெபத்துரை
Additional information
| Author | J. Sam Jebadurai  | 
		
|---|---|
| Publisher | Horeb Art Printers  | 
		
	        




Reviews
There are no reviews yet.