15th, National Day

ELIMGRC

இந்திய சுதந்தர தின ஜெபக் கடிதம் – 15-08-2022

இந்திய நாட்டிற்காகவும், இந்திய அரசாங்கத்துக்காகவும் ஜெபிப்போம்!

அன்பார்ந்த ஜெப நண்பர்களே,

சுதந்தரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, இவ்வாண்டின் சுதந்தர தினத்தினை “ஆசாதி கா அம்ரிட் மஹோட்சவ்” என்ற பெயரில் இந்தியா கொண்டாடுகிறது. அப்படி நாம் கொண்டாடும்போதே, ஜெபத்திற்கென நேரத்தைச் செலவிட நாம் முன்வருமோவாக. கடந்த 75 ஆண்டுகளில் இந்திய நாடு பெற்றுக்கொண்ட எல்லா ஆசீர்வாதங்களுக்காகவும் கர்த்தருக்கு ஸ்தோத்திரங்களை ஏறெடுப்போம். நமது நாட்டின் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களையும், நாம் நேசிக்கும் நமது நாட்டின் குறிப்பிட்ட தேவைகளையும் ஜெபத்தில் முன்வைப்போம்.

2021ஆம் ஆண்டு, செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்தர விழாவில் பாரதப் பிரதமர் திரு, நரேந்திர மோடி அவர்கள் கீழ்க்கண்ட ஷரத்துகளை தனது உரையில் தெரிவித்தார். இந்திய நாடு மற்றும் அதன் குடிமக்களின் செழிப்பைப் புதிய உயரத்துக்கு உயர்த்துவதே “அம்ரிட் கால்” இன் குறிக்கோளாகும். வசதி வாய்ப்புகள் தொடர்பான ஏற்ற இறக்கங்கள் இல்லாத கிராமங்களையும் நகரங்களையும் கொண்ட இந்திய நாட்டை உருவாக்குவதே “அம்ரிட் கால்” இன் குறிக்கோளாகும். காரணமில்லாமல் குடிமக்களின் வாழ்க்கையில் அரசாங்கம் தலையிடுவதில்லை என்னும் சூழ்நிலையைக்கொண்ட இந்திய நாட்டை உருவாக்குவதே “அம்ரிட் கால்” இன் குறிக்கோளாகும். உலகத்திலுள்ள அனைத்து நவீன உள்கட்டமைப்புகளையும் உள்ளடக்கிய இந்திய நாட்டை உருவாக்குவதே “அம்ரிட் கால்” இன் குறிக்கோளாகும். யாருக்குமே நாம் குறைவானவர்களாக இருக்கக்கூடாது. இந்திய நாட்டின் கோடான கோடி குடிமக்களின் ஒருமித்த தீர்மானம் இதுவே. முழுமூச்சான கடின உழைப்புடனும், தைரியத்துடனும் இத்தீர்மானத்திற்காக ஒன்றிணைந்து பாடுபடும்வரை இது முழுமைப் பெறாததாகவே இருக்கும்.  எனவே தமது எல்லாத் தீர்மானங்களையும் நிறைவேற்ற நாம் கடின உழைப்பும் தைரியமும் கொண்டவர்களாக உழைக்கவேண்டும். நமது எல்லைகளுக்கு வெளியே உள்ள உலகத்தைக்கூட பாதுகாப்பானதும் செழிப்பானதுமாக மாற்ற நமது இந்த கனவுகளும் தீர்மானங்களும் வழிவகுக்கும்.

“அம்ரிட் கால்” இன் பலவித குறிக்கோள்களை நோக்கி இந்திய நாடு பயணிக்கும் இந்த நேரத்தில், அரசாங்கமானது நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உணவு, உறைவிடம், உடல் நலம், கல்வி, வேலை வாய்ப்பு, தொழில் வாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பான சூழ்நிலை ஆகியவற்றை வழங்குவதில் எல்லாக் கட்டங்களிலும் வெற்றியடையவேண்டும் என்று நாம் ஜெபிப்போம்.

https://www.nationaldayofprayer.in/ இடமிருந்து பெறப்படும் மேலும் சில ஜெபக்குறிப்புகள்:

அரசியல் தலைமை:

  • புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு அவர்களுக்கும், உப ஜனாதிபதி திரு ஜக்தீப் ஜாங்கர் அவர்களுக்கும் கர்த்தர்தாமே நல்ல உடல் நலத்தையும், ஞானத்தையும் பெலத்தையும் தரவேண்டுமென ஜெபிப்போம்!
  • நமது பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்களுக்காக ஜெபிப்போம்! அவர் தனது ஆட்சியை நீதியுடனும், சமத்துவத்துடனும், சகோதரத்துவத்தை முன்னிறுத்துபவராகவும் நாட்டை ஆளவேண்டும் என ஜெபிப்போம்! கர்த்தர்தாமே அவருக்கு நல்ல உடல்நலத்தைக் கட்டளையிட வேண்டுமென்றும் ஜெபிப்போம்!
  • ஒன்றிய அமைச்சரவைக்காகவும், எல்லா ஒன்றிய அமைச்சர்களுக்காகவும் ஜெபிப்போம்! அவர்கள் நல்ல புரிதலுடன் நியாயமான வகையில் இந்திய நாட்டு மக்களின் முன்னேற்றத்துக்காக உழைக்கவேண்டும் என்றும் ஜெபிப்போம்!

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும்:

  • நமது நாட்டின் ஒவ்வொரு மாநிலத்தின் சமாதானத்துக்காகவும், செழிப்புக்காகவும் ஜெபிப்போம்!
  • மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான ஆளுநர்களுக்காகவும், முதலமைச்சர்களுக்காகவும், துணை நிலை ஆளுநர்களுக்காகவும் ஜெபிப்போம்! அவர்களைத் தாங்கும் அமைச்சரவைகளுக்காகவும்கூட ஜெபிப்போம்!

நீதித்துறை:

  • உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்காகவும், பல்வேறு உயர்நீதிமன்றங்கள் மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றின் நீதிபதிகளுக்காகவும் ஜெபிப்போம்! அவர்களால் பாகுபாடின்றியும், அழுத்தம் இன்றியும் செயல்பட இயலவேண்டும் என்றும் ஜெபிப்போம்! அவர்களுடைய ஞானத்துக்காகவும், பெலத்துக்காகவும் ஜெபிப்போம்!

மற்ற சட்ட ரீதியான அமைப்புகள்:

  • இந்திய நாட்டு தேர்தல் ஆணையத்துக்காகவும், மாநிலங்களிலுள்ள தேர்தல் ஆணையங்களுக்காகவும் ஜெபிப்போம்! அவை நல்ல முறையில் இயங்கி, தேர்தல்களை நடுநிலையுடன் நேர்மையாக நடத்தவேண்டுமென ஜெபிப்போம்!
  • மத்திய புலனாய்வுப் பிரிவு, அமலாக்க இயக்ககம், தேசிய மனித உரிமை ஆணையம், தேசிய சிறுபான்மையினர் ஆணையம், தேசிய சட்ட ஆணையம், தேசிய மகளிர் ஆணையம், தேசிய பசுமை வாரியம், பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான தேசிய ஆணையம், ஆயுதப்படைகள் தீர்ப்பாயம் ஆகிய அமைப்புகளுக்காக ஜெபிப்போம்!

சமுதாயம்:

  • வேற்றுமையில் ஒற்றுமையின் சிறப்பை மக்கள் மதித்து, பின்பற்றவேண்டும். பலதரப்பட்ட இனம் மற்றும் மொழி ஆகியவற்றைச் சார்ந்த மக்கள் இணக்கத்துடனும், சமாதானத்துடனும், ஒன்றிணைந்து வாழவேண்டுமென ஜெபிப்போம்!
  • சமுதாயத்தில் பாதிப்புக்குள்ளாகக்கூடிய பிரிவினரின் பாதுகாப்புக்காக, முக்கியமாக பெண்கள், குழந்தைகள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் ஆகியோரின் பாதுகாப்புக்காக ஜெபிப்போம்!

பாதுகாப்புப் படைகள்:

  • இராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவை நாட்டுக்கு நலன் பயக்கவேண்டுமென ஜெபிப்போம்! இப்படைகளில் உள்ளோரில் பலர் தங்கள் குடும்பத்தையும், தங்கள் அன்பிற்குரியவர்களையும் பிரிந்து தொலை தூரத்தில் இருக்க நேர்வதால் அவர்கள் சமாதானத்துடனிருக்கவேண்டும் என்றும் அவர்களை அன்பானது சூழ்ந்திருக்கவேண்டும் என்றும் ஜெபிப்போம்!
  • பாதுகாப்புத் துறைக்காகவும், அதன் பல்வேறு பிரிவுகளுக்காகவும் ஜெபிப்போம்! அவர்கள் அதிகபட்சமாய் தேசத்துக்குத் தொண்டாற்றவேண்டும் என்றும் ஜெபிப்போம்!

ஜெப நேரத்தில் 1 தீமோத்தேயு 2:1-4 ல் காணும் வேதப்பகுதி  வலியுறுத்துகின்றபடி ஒவ்வொரு தலைவருக்காகவும் அவர் பெயர்சொல்லி ஜெபிப்போம்!

இந்திய நாட்டின் ஜனாதிபதி: திருமதி துரௌபதி முர்மு

இந்திய நாட்டின் உப ஜனாதிபதி: தி ருஜக்தீப் தாங்கர்

இந்திய நாட்டின் பிரதம மந்திரி: திரு நரேந்திர மோடி

 

ஒன்றிய அமைச்சரவையிலுள்ள அமைச்சர்கள் பட்டியல் – 2022

வ. எண்பெயர்துறைகள்
1திரு நரேந்திர மோடிபணியாளர் நலன், குறை தீர்ப்பு ஓய்வூதியம், விண்வெளித்துறை, அணுசக்தித்துறை, அனைத்து முக்கிய கொள்கை முடிவுகள், வேறு யாருக்கும் ஒதுக்கப்படாத மற்ற துறைகள்
2திரு அமிட் ஷாஉள்துறை, கூட்டுறவு
3திரு ராஜ்னாத் சிங்பாதுகாப்பு
4திரு நிதின் ஜெய்ராம் கட்கரிசாலைப் போக்குவரத்து நெடுஞ்சாலைத்துறை
5திரு நாராயண் டட்டுரானேகுறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள்
6திருமதி நிர்மலா சீதாராமன்நிதி, பெருநிறுவனங்கள்
7திரு நரேந்திர சிங் டோமர்வேளாண் மற்றும் விவசாயிகள் நலம்
8திரு சர்பனடா சோனவால்துறைமுகங்கள், கப்பல் மற்றும நீர்வழிகள் மற்றும்  ஆயுஷ்
9Dr. வீரேந்திர குமார்சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல்
10Dr. சுப்ரமணிய ஜெய்சங்கர்வெளியுறவு
11திரு ராமச்சந்திர பிரசாத்எஃகு
12திரு அர்ஜுன் முண்டாபழங்குடி விவகாரங்கள்
13திருமதி ஸ்மிரிட் ஜுபின் இரானிமகளிர், குழந்தைகள்
14திரு மன்சுக் மாண்டவியாசுகாதாரம், குடும்பநலம், இரசாயனம், உரங்கள்
15திரு அஸ்வினி வைஷ்னவ்ரெயில்வே, தொலைத்தொடர்பு, மின்னணு, தொழில்நுட்பம்
16திரு பியூஷ் கோயல்வர்த்தகம், தொழில்துறை, நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொதுவினியோகம், ஜவுளி
17திரு தர்மேந்திர பிரதான்கல்வி, திறன்மேம்பாடு, தொழில் முனைவு
18திரு முக்தார் அப்பாஸ் நக்விசிறுபான்மையினர் விவகாரங்கள்
19திரு பிரல்ஹாட் ஜோஷிநாடாளுமன்ற விபகாரங்கள், நிலக்கரி, சுரங்கங்கள்
20திரு ஜோதிர் ஆதித்தியா M சிந்தியாசிவில் விமான போக்குவரத்து
21திரு கிரிராஜ் சிங்ஊரக மேம்பாடு, பஞ்சாயத்ராஜ்
22திரு கஜெந்திர சிங் ஷெக்ஹாவட்ஜல்சக்தி
23திரு பஷுபதிகுமார் பாரஸ்உணவு பதப்படுத்துதல்
24திரு கிரேன் ரிஜிஜுசட்டம் மற்றும் நீதித்துறை
25திரு ராஜ்குமார் சிங்எரிசக்தி, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
26திரு ஹர்தீப்சிங் பூரிபெட்ரோலியம், இயற்கை எரிவாயு, வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள்
27திரு புபேந்தர் யாதவ்சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம், தொழிலாளர், வேலைவாய்ப்பு
28Dr. மஹேந்திரநாத் பாண்டேகனரக தொழில்துறை
29திரு பர்ஷோதம் ருபாலாமீன்வளம், கால்நடை, பால் வளம்
30திரு கிஷான் ரெட்டிகலாசாரம், சுற்றுலா, வடகிழக்கு மாகாண வளர்ச்சி
31திரு அனுராக்சிங் டகூர்தகவல் ஒலிபரப்பு, இளைஞர் விவகாரங்கள், விளையாட்டு

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான முதலமைச்சர்கள், ஆளுனர்கள் மற்றும் துணைநிலை ஆளுனர்கள் பட்டியல்:

வ. எண்மாநிலம் / யூனியன் பிரதேசம்முதலமைச்சர்ஆளுனர் / துணை நிலை ஆளுனர்
1ஆந்திரப் பிரதேசம்திரு ஜெகன்மோகன் ரெட்டிதிரு பிஸ்வபூசன் ஹரிச்சந்தன்
2அந்தமான் & நிக்கோபார் தீவுகள் திரு தேவேந்திர குமார் ஜோஷி 
3அருணாசலப் பிரதேசம்திரு பெமா காண்டுதிரு பி. டி. மிஸ்ரா
4அஸ்ஸாம்திரு ஹிமாந்த பிஸ்வாஸ் சர்மாதிரு ஜகதீஷ் முகீ 
5பீகார்திரு நிதிஷ்குமார்திரு பாகு சவுகான்
6சண்டிகர் திரு பன்வாரிலால் புரோகித்
7சத்தீஸ்கர்திரு பூபேஷ் பாகல்திரு அனுசூயா உய்கீ
8தாத்ரா மற்றும் நகர் ஹவேலி திரு பிரபுல் கோடா படேல்
9டாமன் & டையூ திரு பிரபுல் கோடா படேல்
10டெல்லிதிரு அரவிந்த் கெஜ்ரிவால் திரு வினய்குமார் சக்சேனா
11கோவாதிரு ப்ரமோத் சாவந்த்திரு ஸ்‌ரீதரன் பிள்ளை
12குஜராத்திரு விஜய்பாய் ரூபானிதிரு ஆச்சாரியா தேவ்ரத்
13ஹரியானாதிரு மனோஹர்லால் கட்டார்திரு பண்டாரு தத்ரேயா
14ஹிமாசல் பிரதேஷ்திரு ஜெய்ராம் டக்கூர்திரு விஸ்வனாத் ஹர்லேகர்
15ஜம்மு & காஷ்மீர் மனோஜ் சின்கா
16ஜார்க்கண்ட்திரு ஹேமாந்த் சொரன்திரு ரமேஷ் பையஸ்
17கர்நாடகாதிரு பசவராஜ் பொம்மைதிரு தவார் சந்த் ஜெஹ்லொட்
18கேரளாதிரு பினராய் விஜயன்திரு ஆரிக் முகம்மது கான்
19லக்ஷதீப் திரு பிரபுல் கோடா படேல்
20லடாக் திரு ராதாகிருஷ்ண மதூர்
21மத்தியபிரதேசம்திரு ஷிவ்ராஜ் சிங் சவுகான்திரு மங்குபாய் சாகன்பாய் படேல் 
22மகாராஷ்ட்ராதிரு யேக்னாத் ஷிண்டேதிரு பகத்சிங் கோசியாரி 
23மணிப்பூர்திரு பிரேன்சிங்இல. கணேசன்
24மேகாலயாதிரு கான்ராட் சங்மாதிரு சத்தியபால் மாலிக்
25மிசோரம்திரு சோரம்தாங்காDr, கம்பம்பட்டி ஹரிபாபு
26நாகாலாந்துதிரு நைபியூ ரியூதிரு ஜக்திஷ் முக்கி
27ஒடிஷாதிரு நவீன் பட்னாய்க்Prof. கனேஷ்லால்
28பாண்டிச்சேரிதிரு ரங்கசாமிDr. தமிழிசை சவுந்தரராஜன்
29பஞ்சாப்திரு பகவந்த் மான்திரு பன்வாரிலால் புரோஹித்
30ராஜஸ்தான்திரு அஷோக் கெலாட்திரு கல்ராஜ் மிஸ்ரா
31சிக்கிம்திரு ப்ரேம்சிங் தமாங்திரு கங்காபிரசாத்
32தமிழ்நாடுதிரு ஸ்டாலின்திரு ரவி
33தெலுங்கானாதிரு சந்திரசேகர ராவ்Dr. தமிழிசை சவுந்தரராஜன்
34திரிபுராதிரு மானிக்சாஹாதிரு சத்யதேவ் நாராயண் ஆரியா
35உத்தரபிரதேசம்திரு யோகி ஆதிதியநாத்திருமதி ஆனந்திபென் படேல்
36உத்தர்காண்ட்திரு புஷ்கர் சிங் தாமேதிருமதி குர்மிக்சிங்
37மேற்கு வங்காளம்செல்வி. மம்தா பானர்ஜீதிரு இல. கணேசன்ச்

 

Lovingly

Ps. Osborne Jebadurai

SBCTOTO LOGIN toto slot pulsa toto togel toto toto togel toto slot toto toto togel amavi5d sesetoto sontogel situs slot situs slot situs toto toto togel situs toto situs toto situs toto situs toto situs toto winsortoto toto pajaktoto login benteng786 situs toto toto slot ollo4d slot w33slot w33slot toto slot bwo99 bwo99 toto sontogel toto hoki99 traveltoto slot88 idrtoto situs toto toto togel toto togel toto togel toto slot pucuk4d pucuk4d licin4d pascol4d situs toto titi4d toto PEWE4D PAP4D slot gacor toto bobatoto toto agendunia55 slot gacor toto dagelan4d login slot SLOT BET 200 desa wisata pujon kidul 13 situs toto toto slot https://seattlesoapbox.com/collections/all toto slot toto togel toto togel toto togel situs toto akuntoto slot gacor slot gacor toto toto togel toto togel toto togel situs toto toto slot toto slot toto togel toto slot hoki99 login situs toto https://www.timexplywoodanddoors.com/clients/ slot gacor slot gacor bwo303 bwo99 toto slot toto togel bwo99 toto situs togel toto slot benteng786 toto slot TITI4D toto slot toto slot situs toto slot online naga91 pewe4d PANJANG4D toto slot suneo138 slot nona123 toto 4d toto slot Jokertoto login ilmutoto slot gampang menang jp mania toto titi4d delitoto situs toto w33slot 91dewa toto slot slot gacor slot mahjong leon188 leon188 login toto slot MANCINGDUIT slot 4d bwo99 AMANAHTOTO AMANAHTOTO slot toto slot toto https://saint-mathieu.com/spcaroussillon/ LUNATOGEL https://icapval.com/sas/blog/ slot 4d toto slot slot 4d toto slot toto slot Amanahtoto toto slot togel slot babeh188 kaostogel indobet akuntoto slot toto slot 4d situs toto toto agb99 situs toto PEWE4D situs toto PASCOL4D Toto slot 4d https://www.teamajans.com/kurumsal/ toto toto slot toto slot depo 10k situs toto situs toto toto toto slot ilmutoto bandar toto toto slot toto 8kuda4d toto situs toto toto togel titi4d rasa4d gampangtoto winsortoto winsortoto bandar toto situs toto bosjoko bosjoko jonitogel jonitogel slot88 titi4d toto slot slot gacor slot judi bola mix parlay toto situs gacor situs toto toto toto link slot toto toto toto toto toto toto toto toto popo togel toto slot toto slot toto link login eropa99 toto logototo alternatif situs toto 8kuda4d toto toto situs toto https://www.educasantiago.cl/ 4D