குறிப்பு: பின்வரும் கேள்விகளுக்கு மதிப்பெண்களுக்கு ஏற்றவாறு பதிலளிக்கவும்
I. பின்வரும் கேள்விகளில் சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும் 10 x 1 = 10
1. புலம்பல் .......................................வகையை சார்ந்தது
அ. சங்கீத வகை ஆ. சரித்திர வகை.இ. ஞான இலக்கிய வகை .ஈ. தீர்க்கதரிசன வகை.
2. யோபு வாழ்ந்த காலம் ...............................................
அ. முற்பிதாக்களின் காலம். ஆ. நியாயப்பிரமாணத்தின் காலம். இ. இராஜாக்களின் காலம். ஈ. ஞானிகளின் காலம்.
3. சங்கீத புத்தகம் மோசே முதற்கொண்டு ...............................................காலமட்டும் உள்ள பாடல்களை/ சங்கீதங்களை கொண்டுள்ளது.
அ. தாவீதின் காலம் வரை. ஆ. சாலமோனின் காலம் வரை. இ. சிறையிருப்பின் காலம் வரை. ஈ. தீர்க்கதரிசிகளின் காலம் வரை
4. பிரதான கற்பனை .......................................... மையப்படுத்தி உள்ளது.
அ. ஆத்தும ஆதாயத்தை. ஆ. சீஷவத்துவத்தை. இ. திருச்சபை வளர்ச்சியை. ஈ. உலக சுவிசேஷத்தை.
5. மத்தேயு, மாற்கு, மற்றும் லூக்கா சுவிசேஷத்தை ...................................... என அழைக்கிறோம்.
அ. அப்போஸ்தல சுவிசேஷம். ஆ. ஒத்த கருத்துடைய (Synoptic Gospels) இ. சீஷர்களின் சுவிசேஷம்ஈ. பிரதான சுவிசேஷம்.
6. பிலமோன், I. தீமோத்தேயு, II, தீமோத்தேயு மற்றும் தீத்து நிருபங்கள் பவுலால் ......................................... எழுதப்பட்டது.
அ. சபைகளுக்கு. ஆ. கள்ள உபதேசத்திற்க்கு எதிராக. இ. ஊழிய ஆலோசனைகள். ஈ. தனிப்பட்ட நபர்களுக்கு.
7. கடைசி காலத்தை குறித்த சத்தியங்களை வெளிப்படுத்தும் புத்தகம்......................................
அ. தானியேல் மற்றும் வெளிப்படுத்தின விசேஷம். ஆ. தீர்க்கதரிசின புத்தகங்கள். இ. சுவிசேஷங்கள். ஈ. வேதாகமம் அனைத்தும்.
8. விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் என்னும் வேத சத்தியம் ...................................வேத புத்தகங்களில் உள்ளது
அ. பழைய ஏற்பாட்டில் ஆபகூக் தீர்க்கதரிசன புத்தகத்திலும் புதிய ஏற்பாட்டில் உள்ள ரோம நிருபத்திலும் உள்ளது. ஆ. பவுல் எழுதிய ரோம மற்றும் கலாத்திய நிருபத்தில் உள்ளது. இ. ரோம நிருபத்தில் உள்ளது. ஈ. எபிரேய நிருபத்தில் உள்ளது.
9. திரித்துவம் என்னும் வார்த்தை வேதாகமத்தில் உள்ளது.............................
அ. ஆம்.ஆ. இல்லை. இ. எபிரேய மொழியில் உள்ளது. ஈ. கிரேக்க மொழியில் உள்ளது.
10. அர்மகதான் யுத்தம் என்பது .................................
அ. மூன்றாம் உலக யுத்தம். ஆ. ஆட்டுக்குட்டியானவருக்கும் பிசாசுக்கும் இடையே. இ. அணு ஆயுத யுத்தம். ஈ. இஸ்ரவேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையேயான யுத்தம்.
II. கோடிட்ட இடங்களை நிரப்பவும்10 x 1 = 10
1. புதிய ஏற்பாடு ................................... மொழியில் எழுதப்பட்டுள்ளது.
2. காணான் தேசத்தை சுற்றிப்பார்த்த மற்றும் அதை சுதந்தரித்த வேவுகாரர் ....................................... மற்றும் ...........................
3. சிறையிருப்புக்கு பிந்தைய தீர்க்கதரிசிகள் என்று அழைக்கப்படும் சிறிய தீர்க்கதரிசிகள் ..................................; ............................ மற்றும் ........................
4. யூதா தேசம் பாபிலோனியாவால் சிறையாக்கப்படும் முன்பு, சிறையிருப்பின் போது, சிறையிருப்பின் பின்பாக தீர்க்கதரிசனம் உரைத்த தீர்க்கதரிசி ........................
5.............................. சுவிசேஷம் இயேசுவின் போதனைகளை மையப்படுத்தி உள்ளது.
6. இஸ்ரவேல் தேசமாகிய வடக்கு தேசம்.......................................... தேசத்தால் சிறையாக்கப்பட்டது.
7. ஆறுதலின் மகன் என அறியப்பட்டவன் ....................................
8. எபிரேய மருத்துவச்சிகளின் பெயர்கள் ......................... மற்றும் ...............................
9. வேதாகமத்தின் மைய வசனம் ................................. எங்கு உள்ளது?
10. இயேசு பிறந்த பெத்தலகேமைக் குறித்து ..................................... சிறிய தீர்க்கதரிசி தீர்க்கதரிசனம் உரைத்தான்.
III. பின்வரும் கேள்விகளுக்கு சரியா/ தவறா என பதிலளிக்கவும் 10 x 1 = 10
1. யோவான் சுவிசேஷத்தை இறையியல் சுவிசேஷம் என அழைப்பர்.
2. ஆசியாவில் உள்ள எபேசு திருச்சபைக்கு நிருபம் எழுதியவர் அப்போஸ்தலனாகிய பவுல்.
3. அந்திக்கிறிஸ்துவின் அடையாளம் 786 என்பதாகும்.
4. ஆராதனை ஊழியம் பவுல் போதித்த ஐந்து வகை ஊழியத்தை சார்ந்தது ஆகும்.
5. அழுகையின் தீர்க்கதரிசி என ஏசாயா தீர்க்கதரிசி அழைக்கப்பட்டான்.
6. மலை பிரசங்கம் லூக்கா சுவிசேஷத்தில் உள்ளது.
7. மத்தியாஸ் சீட்டு போடப்பட்டு யூதாஸ் காரியத்து இழந்த அப்போஸ்தல நிலைக்கு தேர்ந்து எடுக்கப்பட்ட சீஷன்.
8. அரிமத்தியானாகிய யோசேப்பு சிலுவையை சுமந்தவன்.
9. ஒன்று பேதுரு நிருபம் சில்வானால் எழுதப்பட்டது.
10. ஏசாயா, யோசுவா, மற்றும் ஒசியா என்றால் கடவுள் என் இரட்சிப்பு என்று பொருள் படும்.
III. பின்வரும் கேள்விகளுக்கு மூன்று அல்லது நான்கு வரிகளில் குறிப்புகள் வரையவும் எவையேனும் பத்து கேள்விகளுக்கு மாத்திரம் விடையளிக்கவும் 10 x 2 = 20
1. சபை சரித்திரம் என்றால் என்ன?
2. பிரதான கற்பனை என்றால் என்ன?
3. சிறிய / பெரிய தீர்க்கதரிசனங்களுக்கு இடையே காணப்படும் வித்தியாசங்கள் என்ன?
4. ஞான இலக்கியங்கள் என்றால் என்ன?
5. பெரிய மற்றும் சிறிய தீர்க்கதரிசன புத்தகத்தை பட்டியலிடவும்?
6. புதிய ஏற்பாட்டு நூல்களை பட்டியலிடவும்?
7. கள்ள உபதேசங்கள் என்றால் என்ன?
8. பழைய ஏற்பாட்டின் முக்கிய பிரிவுகளை பட்டியலிடவும்?
9. புதிய ஏற்பாட்டின் முக்கிய பிரிவுகளை பட்டியலிடவும்?
10. பரமண்டல் ஜெபத்தை எழுதவும்?
11. இஸ்ரவேல் தேசத்து 12 கோத்திர பிதாக்களை பட்டியலிடவும்?
12. இயேசு கிறிஸ்துவின்12 சீஷர்களை பட்டியலிடவும்?
13. உடன்படிக்கை என்றால் என்ன?
14. ரூத் புத்தகத்தை குறித்து எழுதவும்?
15. பிரசங்கி புத்தகம் உணர்த்தும் சத்தியம் என்ன?
IV. பின்வரும் கேள்விகளுக்கு விரிவான விடையளிக்கவும் எவையேனும் எட்டு கேள்விகளுக்கு மாத்திரம் 8 x 5 = 40
1. பஞ்சாகமம் என்னும் மோசேயின் புத்தகங்களை குறித்து விரிவாக எழுதவும்.
2. யோசுவா முதல் எஸ்தர் வரையில் உள்ள புத்தகங்களை குறித்து விரிவாக எழுதவும்.
3. நீதிமொழிகள் மற்றும் பிரசங்கி புத்தகத்தின் வாயிலாய் சாலமோன் எடுத்துரைப்பது என்ன
4. தானியேல் புத்தகத்திலிருந்து நாம் அறிந்து கொள்வ்து என்ன?
5. திருச்சபை வரலாற்றை படிப்பதினால் ஏற்படும் பயன்கள் என்ன?
6. சீஷத்துவம் என்றால் என்ன?
7. எல்லா மதங்களும் ஒன்று தான் என்று சொல்லுபவர்களுக்கு உமது பதில் என்ன?
8. உன்னதப்பாட்டைக்குறித்து தவறாக பேசுபவர்களுக்கு உமது பதில் என்ன?
9. வெளிப்படுத்தின விசேஷத்தின் மூலம் தேவன் நமக்கு உணர்த்துவது என்ன?
0. ஐந்து வகை ஊழியங்களை குறித்து எழுதவும்?
11. ஆண்டவரின் வருகைக்கான அடையாளங்கள் என்ன?
12. தூதர்களை குறித்து வேதாகமம் எடுத்துரைப்பது என்ன?
13. யாக்கோபு நிருபம் எடுத்துரைக்கும் சத்தியம் என்ன?
14. அப்போஸ்தல நடபடிகள் எடுத்துரைக்கும் சத்தியம் என்ன?
15. சங்கீதங்களை குறித்து எழுதவும்?
V. பின்வரும் கேள்விகளின் எவையேனும் ஒன்றைக் குறித்து கட்டுரை வரையவும் 1 x 10 = 10
1. இப்பாடத்தின் வழியாய் நீவிர் அறிந்து கொண்டது என்ன?
2. கிறிஸ்துவின் தெய்வீகத்தை குறித்தும் மனுஷிகத்தை குறித்தும் விரிவாக எழுதுக?
3. சிறிய தீர்க்கதரிசன புத்தகங்களை குறித்து கட்டுரை வரையவும் ?