முக முகமாய்!

50.00

முன்னுரை!

2016-ம் ஆண்டு, இலங்கையிலுள்ள போதகர். சாரங்கபாணி அவர்கள், தங்களுடைய ஆலயத்தின் 23-ம் ஆண்டு நிறைவு விழா கன்வென்ஷன் கூட்டங்களுக்கு, என்னை அழைத்தபோது, “முக முகமாய்!” என்ற தலைப்பைக் கொடுத்தார். அந்த தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. ஆகவே, அந்தக் கூட்டங்களுக்காக ஆயத்தப்படுத்தி, இலங்கையிலே மூன்று செய்திகளை பிரசங்கித்தேன்.

2016-ம் ஆண்டு, செப்டம்பர் மாதம், திருப்பத்தூரில் நடந்த உபவாச ஜெபக் கூட்டத்திற்கு, என்ன தலைப்பை கொடுப்பது? என்று எண்ணி ஏங்கினபோது, கர்த்தர் மீண்டும் அதே தலைப்பை ஞாபகப்படுத்தினார். ஆகவே, திருப்பத்தூர் முகாமிலே, ஆறு ஊழியக்காரர்களும், “முக முகமாய்!” என்ற தலைப்பிலே, மொத்தம் 10 செய்திகளை வழங்கினோம். இதனால் அங்கு வந்த ஜனங்கள், மிகவும் ஆசீர்வதிக்கப்பட்டார்கள்.

அந்த செய்திகள், காற்றோடு காற்றாக போய்விடக்கூடாது, என்றும் நிலைக்க வேண்டும் என்பதற்காக, புத்தக வடிவிலே, இதை வெளியே கொண்டுவர கர்த்தர் உதவி செய்தார். இது உங்களுக்கு, நிச்சயமாகவே பிரயோஜனமாயிருக்கும். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய இரண்டாவது வருகை, மிகவும் நெருங்கிவிட்டது. அப்பொழுது நாம் மறுரூபமாக்கப்படுவோம். மகிமையின் மேல் மகிமையடைவோம். கிறிஸ்துவின் பொன் முகத்தை, கண்குளிர காண்போம்.

ஆகவே, எப்பொழுதும் கர்த்தரை முகமுகமாய் சந்திக்கும் நாளுக்காக ஆயத்தமாயிருங்கள். தேவபிள்ளைகளையும், ஆயத்தப் படுத்துங்கள். கர்த்தருடைய கிருபை உங்களோடிருப்பதாக.

சகோ. J. சாம் ஜெபத்துரை

SKU: BN820 Category: Tag:

Additional information

Author

J. Sam Jebadurai

Publisher

Horeb Art Printers