Daily Updates

தினம் ஓர் ஊர் – பத்மநாபபுரம் (Padmanabhapuram) – 16/08/23

தினம் ஓர் ஊர் – பத்மநாபபுரம் (Padmanabhapuram)

மாநிலம் – தமிழ்நாடு

மாவட்டம் – கன்னியாகுமரி

மக்கள் தொகை – 21,342

கல்வியறிவு – 93.2%

மக்களவைத் தொகுதி – கன்னியாகுமரி

சட்டமன்றத் தொகுதி – பத்மநாபபுரம்

மாவட்ட ஆட்சியர் – Bro. P.N.Sridhar (I.A.S)

துணை மாவட்ட ஆட்சியர் – Bro. H.R.Koushik (I.A.S)

காவல்துறை கண்காணிப்பாளர் – Bro. D.N.Hari Kiran Prased (I.P.S)

District Revenue Officer – Bro. J.Balasubramaniam

District Forest Officer – Bro. M.Ilayaraja (I.F.S)

Joint Director / Project Director – Bro. P.Babu

மக்களவை உறுப்பினர் – Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth (MP)

சட்டமன்ற உறுப்பினர் – Bro. T.Mano Thangaraj (MLA)

நகராட்சி ஆணையாளர் – Bro. S.Lenin

நகராட்சி தலைவர் – Bro. G.Arulshoban

நகராட்சி துணை தலைவர் – Bro. R.Unnikrishnan

Town Planning Inspector – Sis. T.Daisy

(Padmanabhapuram)

Principal District Court – Bro. S.Arulmurugan

ஜெபிப்போம்

பத்மநாபபுரம் (Padmanabhapuram), தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்குளம் வட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். பத்மநாபபுரம் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பழைய தலைநகரம். 1795-இல் திருவிதாங்கூர் மன்னரான ராமவர்மா தலைநகரை பத்மநாபபுரத்தில் இருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினர். பத்மநாபபுரம் நகராட்சிக்காக ஜெபிப்போம்.

பத்மநாபபுரம் திருவிதாங்கூர் இராச்சியத்தின் (தற்போது இந்தியாவின் ஒரு பகுதி) முந்தைய தலைநகராக இருந்தது. தர்ம ராஜா என்று அழைக்கப்பட்ட திருவாங்கூர் மன்னர் ராம வர்மா, 1795 இல் தலைநகரை பத்மநாபபுரத்திலிருந்து திருவனந்தபுரத்திற்கு மாற்றினார். அந்த நேரத்தில், திருவிதாங்கூரின் எல்லைகள் இன்றைய இந்திய மாநிலமான கேரளாவின் பாதிக்கு குறைவாகவே விரிவடைந்திருந்தன. 1957 வரை, பத்மநாபபுரம் திருவிதாங்கூர் இராச்சியத்தின் ஒரு பகுதியாகவும், பின்னர் திருவிதாங்கூர்-கொச்சி மாநிலமாகவும் அமைந்தது. மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போதுதான், திருவாங்கூர்-கொச்சி மாநிலத்தின் முந்தைய திருவனந்தபுரம் மாவட்டத்தின் கல்குளம் (பத்மநாபபுரம் உட்பட), விளவங்கோடு, தோவாளை மற்றும் அகஸ்தீஸ்வரம் தாலுக்காக்கள், சென்னை மாகாணத்தில் (பின்னர் தமிழ்நாடு எனப் பெயர் மாற்றப்பட்டது) கன்னியாகுமரி மாவட்டமாக சேர்க்கப்பட்டன.

இந்த நகரம் பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதிக்கும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது. பத்மநாபபுரம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் Bro. T.Mano Thangaraj அவர்களுக்காகவும், கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினர் Bro. Vijayakumar (Alias) Vijay Vasanth அவர்களுக்காகவும் ஜெபிப்போம். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியினை உண்மை உத்தமதோடு செய்ய ஜெபிப்போம். தேவ சித்தம் இவர்களை ஆளுகை செய்ய ஜெபிப்போம்.

பத்மநாபபுரம் நகரம் 21 வார்டுகளாக பிரிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. பத்மநாபபுரம் நகராட்சி ஆணையர் Bro. S.Lenin அவர்களுக்காகவும், நகராட்சி தலைவர்       Bro. G.Arulshoban அவர்களுக்காகவும், நகராட்சி துணை தலைவர் Bro. R.Unnikrishnan அவர்களுக்காகவும், Town Planning Inspector Sis. T.Daisy அவர்களுக்காகவும் ஜெபிப்போம். பத்மநாபபுரம் நகராட்சியின் வளர்ச்சி பணிகளுக்காக ஜெபிப்போம்.

இந்த நகராட்சியில் மொத்த மக்கள்தொகை 21,342 ஆகும். இதில் 10,518 ஆண்களும், 10,824 பெண்களும் உள்ளனர். 5,549 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் கல்வியறிவு 93.2% ஆகும். மக்கள்தொகையில் இந்துக்கள் 60.4%, இசுலாமியர்கள் 20.65%, கிறித்தவர்கள் 18.85% மற்றும் பிற மதங்களை சார்ந்தவர்கள் 0.08% ஆகவுள்ளனர். இந்த நகரத்தில் உள்ள மக்களுக்காக அவர்களின் ஆசீர்வாதத்திற்காக இரட்சிப்பிற்காக ஜெபிப்போம். குடும்பங்களை கர்த்தரின் ஆளுகைக்குள் ஒப்புகொடுத்து ஜெபிப்போம்.

பத்மநாபபுரம் நகர மொத்த மக்கள்தொகையில், 7,036 பேர் முக்கிய வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள். அவர்களில் ஆண்கள் 5,749 மற்றும் பெண்கள் 1,287 ஆக உள்ளனர். இவர்களில் 54 விவசாயிகள், 388 முக்கிய விவசாயத் தொழிலாளர்கள், 87 வீட்டுத் தொழில்கள், 5,481 இதர தொழிலாளர்கள், 1,026 குறு விவசாயிகள், 16 குறு விவசாயிகள், 73 குறு விவசாயத் தொழிலாளர்கள், 54 குறு விவசாயத் தொழிலாளர்கள், 54 குறு விவசாயத் தொழிலாளர்கள் என மொத்தம் 7,036 தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்காக ஜெபிப்போம். இவர்கள் கையிட்டு செய்கின்ற எல்லா வேலைகளிலும் கர்த்தருடைய கரம் அவர்களோடுகூட இருந்து பாதுகாத்து வழிநடத்திட ஜெபிப்போம். அவர்களுடைய கையின் பிரயாசங்கள் ஆசீர்வதிக்கப்பட ஜெபிப்போம்.

திருவிதாங்கூர் மன்னர்களின் பழைய அரண்மனையான பத்மநாபபுரம் அரண்மனையும் இங்குதான் உள்ளது. இது 6 ஏக்கர் (24,000 மீ2) பரப்பளவில் பரவியுள்ளது. இந்த அரண்மனை அரச குடும்பத்தின் ஆயுதக் கிடங்கு உட்பட பழங்கால பொருட்களுக்கு பெயர் பெற்றது. இந்த அரண்மனையில் உள்ள மர வேலைப்பாடுகள் சிக்கலானவை. இந்த அரண்மனை கேரள அரசின் தொல்லியல் துறையால் பராமரிக்கப்படுகிறது. பண்டைய பதிவுகளின்படி, இந்த அழகான பல நூற்றாண்டுகள் பழமையான அரண்மனை 16 ஆம் நூற்றாண்டில் இரவி வர்மா குலசேகரனால் கல்குளம் கோட்டையில் கட்டப்பட்டது. ரவிவர்ம குலசேகரப் பெருமாளின் கனவு இல்லம், பண்டைய இந்திய கைவினைத்திறன் மற்றும் மகிமையின் புகழ்ச்சியை எதிரொலிக்கும் கட்டிடக்கலை அதிசயமாக இப்போது நிற்கிறது. இந்த அரண்மனையில் மிகப்பெரிய அன்னதானக்கூடம் உள்ளது. இது அரண்மனையின் கொடையை பறைசாற்றுவதாக உள்ளது. ஏறக்குறைய இரண்டாயிரம் பேர் அமர்ந்து உணவு உண்ணும் இடவசதியுடன் இந்தக் கூடம் அமைந்துள்ளது.

பத்மநாபபுரத்தில் திற்பரப்பு நீர்வீழ்ச்சிகள், மாத்தூரில் தொங்கு பாலம், சித்தரலில் உள்ள பழங்கால ஜெயின் கோயில் (மார்த்தாண்டத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிறிய கிராமம்.) கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலை ஆகியவை மற்ற சுற்றுலாத் தலங்களாகும். மேலும் தென் திருவிதாங்கூரின் பழைய தலைநகரான மருந்துக்கோட்டை (இது ஆயுதக் கிடங்கு வசதி கொண்ட மிகப் பழமையான கோட்டை), சரல்விளை, குமரகோவில் (முருகன் கோயில்), மூலச்செல், சாரோடு, மணலி மற்றும் உதயகிரி கோட்டை ஆகியவை அருகிலுள்ள இடங்களாகும். இங்குள்ள சுற்றுலாத் தலங்களுக்காக ஜெபிப்போம். சுற்றுலாவிற்காக வரும் பயணிகளின் பாதுகாப்பிற்காக ஜெபிப்போம்.

பத்மநாபபுரம் நகராட்சிக்காக ஜெபிப்போம். இங்குள்ள மக்கள் மத்தியில் கர்த்தர் பெரிய எழுப்புதலை கொண்டுவரும்படி ஜெபிப்போம். அநேக தேவபிள்ளைகள் கர்த்தருக்கென்று எழும்பிட ஜெபிப்போம். சுவிசேஷம் அறிவிக்கப்படாத இடங்களில் தேவனுடைய வார்த்தை விதைக்கப்பட ஜெபிப்போம். தேவ சபைகள் கட்டப்பட ஜெபிப்போம். வாலிப பிள்ளைகளுக்காகவும், சிறுபிள்ளைகளுக்காகவும் ஜெபிப்போம். வாலிப பிள்ளைகளை கர்த்தர் வல்லமையாய் எடுத்து பயன்படுத்தும்படி ஜெபிப்போம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.